Tittle
Plan conditons
2026 - Group II, IIA & IV Common TEST BATCH க்கான விதிமுறைகள்
(FULLY ENGLISH MEDIUM)
- Subjects:
- General ENGLISH
- General Studies – ENLISH MEDIUM
- Aptitude – ENGLISH MEDIUM
- தங்களது LOGIN - DASHBOARD பக்கத்தில் பாருங்கள். உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அந்த BATCH யில் சேர்ந்து கொள்ளுங்கள். ENGLISH MEDIUM மாணவர்களுக்கு வைகறை TEST BATCH மட்டுமே நடத்துகிறது. இந்த மேலும் எந்தெந்த புத்தங்களை படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும், WHERE TO STUDY மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு படித்து வைகறையின் தரமான தேர்வு அணியில் இணைந்து சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு நாளை அரசுப் பணிக் கனவை நனவாக்கலாம்.
- அவசரப்பட்டு ஒரு அணியில் சேர்ந்து விட்டு வேறு ஒரு அணிக்கு மாற்றிவிட சொல்லக் கூடாது. அவ்வாறு எங்களால் மாற்ற இயலாது. தேர்வு கட்டணமும் திருப்பி வழங்க இயலாது. எனவே கவனத்துடன் தெளிவான முடிவு எடுக்கவும்.
- இந்த இணையவழி தேர்வு பயிற்சி (Online TEST Batch) அணி 2026 ஜூலை தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும்.
- TNPSC 2026 அட்டவணையின் படி 2026 அக்டோபர் மாதம் Group II, IIA PRELIMS தேர்வும், பின்னர் டிசம்பர் GroupIV தேர்வும் நடைபெறவுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 6 மாதத்திற்கு இந்த வகுப்புகள் மற்றும் வாராந்திரத்தேர்வுகளை வைகறை நடத்த திட்டமிட்டு உள்ளது.
- Group II, IIA & GroupIV பாடத்திட்டம் ஏறக்குறைய (சுமார் 85%) பொதுவான தலைப்புகளை கொண்டு இருக்கிறது. மேலும் Group II, IIA தேர்வுக்கு படிக்கும்போதே GroupIV தேர்வுக்கான பாடத்திட்டமும் முழுமை பெறுகிறது.
- ஆகையால் முதலில் அக்டோபர் 2026 (Group II, IIA PRELIMS) வரை மட்டும் நாம் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். அதன் பின்னர் பயிற்சியில் தொடர விரும்புபவர்கள் டிசம்பர் 2026 வரை இரண்டு மாதங்கள் GroupIV தேர்வுக்கான TEST-க்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
- NOTE : GROUP 4 தேர்வில் அனைவருக்கும் பொதுத் தமிழ் மட்டுமே உள்ளது. (விதிவிலக்காக GENERAL ENGLISH தேர்வினை மாற்று திறனாளிகள் மட்டும் எழுதிக்கொள்ள வழிவகை உண்டு) எனவே நவம்பர் மாதம் நீங்கள் தேவைப்பட்டால் பொதுத்தமிழ் + GENERAL STUDIES + APTITUDE தேர்வு அணிக்கு மாறிக்கொள்ளலாம்
இணையவழித் தேர்வு பற்றிய விவரங்கள்
- புதிதாக படிப்பவர்களும் எளிதாக பாடத்திட்டத்தை படித்து முடிக்கும் வகையில் அடிக்கடி REVISON உடன், வார இறுதியில் 200 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும். ( இதில் அதிக கேள்விகள் கேட்கப்படும் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது)
- இத்தேர்வு General ENGLISH - 100, Aptitude - 25, General Studies - 75 (SCIENCE 15 + SOCIAL SCIENCE 50 + CURRENT AFFAIRS -10) என்ற எண்ணிக்கையில் மொத்தம் 200 வினாக்களுக்கு நடைபெறும்.
- TNPSC தேர்வுகளுக்கு முதல் முறையாக படிக்கும் மாணவர்கள் எடுத்தவுடன் தேர்வு அணியில் (TEST ONLY BATCH ) இணைந்து பயிற்சி பெறுவதை விட , ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகவேண்டும் என்ற அடிப்படை புரிதலுடன் வைகறை வழங்கும் class + Test + Material அணியில் இணைவதே சரியான முடிவாக இருக்கும், (இருந்த போதும் இவ்விடயத்தில் தங்களின் முடிவே இறுதியானது)
- இத்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பான்மையாக புதிய மற்றும் பழைய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ENGLISH, அறிவியல், சமூக அறிவியல், பாட சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில வெளிப்பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு TNPSC நடத்தும் அனைத்து (ENGLISH, பொதுஅறிவு, கணிதம்) பாடத்திட்டத்திலுள்ள தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் நடைபெறும்.
- இதற்காக 6 -12 th GENERAL ENGLISH (NEW & OLD VERSION), SCIENCE , SOCIAL SCIENCE ( 6 -10 th CURRENT BOOKS), +1, +2 CURRENT History, Economics, Political Science, Geography, Indian Ethics and Culture, Commerce, Physics, Chemistry Biology ஆகிய சமச்சீர் புத்தகங்களை (All are English Version) படிக்கத் துவங்கும் முன் மாணவர்கள் கட்டாயம் கையில் வைத்து இருக்க வேண்டும்
- கணிதப் பாடத்திற்கு மட்டும் வைகறை சிறப்பாக தீர்வுகளுடன் தொகுத்தளித்துள்ள வைகறை கணிதம் பாகம் 1, 2, 3 புத்தகங்களைத் தேவைப்படுவோர் நீங்கள் பயணிக்கும் வைகறை Whatsapp குழு வழியாக விவரங்களை கேட்டு தனியாக ரூ.1100 செலுத்தி (மூன்று பாகங்கள் மற்றும் COURIER கட்டணத்துடன் சேர்த்து) பெற்றுக் கொள்ள முடியும். (BUT THIS IS AVAILABLE TAMIL MEDIUM ONLY)
- இது தவிர வைகறையின் நேரடி வகுப்புக்குரிய எந்த பாடக் குறிப்புகளும், வினாத்தாள்களும் Online Test Only batch ல் இணையும் மாணவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
- வைகறை இணைய வழி வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்பில் நடத்துவதை எளிமை படுத்துவதற்காக தேர்வு நோக்கிலான முக்கிய குறிப்புகளை XEROX கட்டணம், அனுப்புவதற்கான கட்டணம் ஆகியவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்புகிறோம்.அதற்காக ஒரு முழுத்தொகையை கட்டணமாக நிர்ணயித்துள்ளோம். அவ்வளவே.
- எனவே குறிப்புகள் தேவைப் படுவோர், முதல் முறையாக படிக்க தொடங்குவோர், ஓரளவு மட்டும் படித்துள்ளவர்கள் வகுப்பு அணியில் இணைந்து கொள்வதே சிறந்தது.
- இணையவழி தேர்வு என்பது பயிற்சிக்கு நேரடியாக வர முடியாதவர்களுக்காக வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர், இல்லத்தரசிகள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு வைகறை வழங்கும் சிறப்பு ஏற்பாடு இயன்ற வரை நேரடி தேர்வுக்கு வர முடிந்தால் வருக.
- அதே சமயம் ஒருமுறை இணையவழி தேர்வு அணியில் இணைந்த பிறகு பயிற்சிக் காலத்தின் இடையிலேயே நேரடி தேர்வுக்கு வர இயலாது. அணி முடியும் வரை இணைய வழியில் மட்டுமே எழுத முடியும். முடிந்த பிறகு மாறிக் கொள்ளலாம்.
- வைகறையில் வாராந்திரத் தேர்வுகளுக்கான உத்தேச முழுத் தேர்வு கால அட்டவணையையும், இது தவிர ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தேர்வுக்குரிய விரிவான where to study யையும் நீங்கள் பார்த்துக் கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனைச் சரியாக குறித்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.
- தேர்வினை திறன்பேசி (Smartphone), மடிக்கணினி (Laptop), கையடக்க கணினி (Tablet), PC (Personal Computer) வழியாக எழுதிக் கொள்ள முடியும்.
- TNPSC யில் பெரும்பான்மையான தேர்வுகள் OMR வழியில் நடத்தப்படுவதால் வைகறையும் இத்தேர்வுகளை OMR வழியாக நடத்துகிறது.
- இதற்காக TNPSC ஆல் வழங்கப்பட்டுள்ள மாதிரி OMR தாளினை தேர்வர்கள் தேவையான அளவு தேர்வு எழுதத் தொடங்குவதற்கு முன் Printout எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான link அல்லது Pdf வழங்கப்பட்டுள்ளது.
- இத்தேர்வு முறையில் வினாத்தாளினை Pdf வடிவில் கணினியில் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே Print out எடுத்து வைத்துள்ள OMR-இல் கருப்பு நிற பேனா மூலம் மட்டுமே Shade செய்ய வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன் காண்பிக்கப்படும் விடைக்குறிப்புகள் (ம) விளக்கங்களைக் கொண்டு OMR விடைத்தாளினைத் திருத்திக் கொள்ள வேண்டும்
- இணையவழியில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 கேள்விக்கு (2 மணி 30 நிமிடங்கள்) அனைத்து விடைகளையும் கணக்கிட்டு OMR னை முழுமையாக இதற்குள் பூர்த்தி செய்வதற்கான நேரமும் இதில் அடங்கும்.
- தவறாது கையெழுத்து மற்றும் கைரேகையும் இட வேண்டும்.
- தேர்வினை எழுதி முடித்தவுடன் அந்தக் குறிப்பிட்ட வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் (Answer key) ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே உங்கள் இணையதளப் பக்கத்தில் பார்க்க இயலும்.
- தேர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை Audio clip வடிவில் பதிவு செய்துள்ளோம். நீங்கள் அதனை Play செய்வதன் மூலம் தேவைப்படும் குறிப்புகள், விளக்கங்களை கேட்டுக் குறித்துக் கொள்ள முடியும்.
- மேலும் வைகறையின் முக்கியமான வினாக்களை மாணவர்கள் தேர்வு சமயத்தில் திருப்பி பார்ப்பதற்காக வினா மற்றும் விடையை (Answer Key Pdf) மட்டும் Material வடிவில் (Download) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
- மனசாட்சிக்கு விரோதமில்லாமல் OMR யை சரியாகத் திருத்தி நீங்கள் சரியாக விடையளித்துள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
- நீங்கள் தேர்வு எழுதும் OMR எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே ஒவ்வொரு OMR யும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் தவறான மதிப்பெண்ணைப் பதிவிடுவது கண்டறியப்பட்டால் பயிற்சியை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.
- வினாத்தாள்களை SCREEN SHOT எடுப்பது , SCREEN RECORD செய்வது, PHOTO அல்லது VIDEO எடுப்பவர்களை நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக கண்காணித்து வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபடுபட்டால் நிச்சயம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தேர்வினை எழுதி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக தேர்வினை எழுதாமல் இருப்பவர்கள் (2 தேர்வுகளுக்கு மேல்) கண்டறியப்பட்டால் உறுதியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். வெற்றிக்கு சீரான பயிற்சி அவசியம்.
- பயிற்சியில் இணைந்த பிறகு பிறகாரணங்களுக்காக பயிற்சியிலிருந்து விலக நேரிட்டால் தாங்கள் செலுத்தியக் கட்டணம் திருப்பி வழங்கவோ அல்லது வேறு நேரடி அல்லது இணையவழி பயிற்சிக்கு மாற்றித்தரவோ இயலாது என்பதை கவனத்தில் கொள்க. பின்னர் இது தொடர்பான எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
- குறுகிய கால இடைவெளியில் பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால் பாடத்திட்டத்தின் கடினத் தன்மையை தவிர்க்க இயலாது. மேலும் நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் ஒதுக்கி படிப்பது அவசியமாகும்.
- இந்த அணியில் வகுப்பு மற்றும் தேர்வு பயிற்சி அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே நடைபெறும். அதையும் மீறி ENGLISH MEDIUM மாணவர்கள் வைகறையின் தரமான தேர்வினை விரும்பினால் அதெற்க்கென பிரேத்யமாக பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இடையில் மொழியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனக்கூறி பயிற்சியில் இருந்து பகுதியுடன் விலகினால் எக்காரணம் கொண்டும் பயிற்சி கட்டணம் திரும்ப பெறுதல் இயலாது.
- தேர்வில் ஒரே வினா அல்லது வினாவில் வாய்ப்பை இழந்தவர் பல ஆயிரம் பேர் உள்ளனர். ஒரே மதிப்பெண் எடுத்த போதும் காலிப்பணியிடங்களின் அளவைப் பொறுத்து அரசு வேலை கிடைத்தவரும், அரசு வேலை கிடைக்காதவரும் இங்கு பலர் உள்ளனர். எனவே அத்தகைய வெற்றியைத் தீர்மானிக்கும் நோக்கில் பயிற்சி மையம் மாணவர்களுக்காக தனித்துவமாக தொகுத்து வழங்கியப் பாடக்குறிப்புகள் நன்றாக படிக்கும் வெளிநபர்களுக்கு முறைகேடாக வழங்கப்படும் பட்சத்தில் இங்கு படிக்கும் யாரோ ஒரு மாணவர் தனக்கான வாய்ப்பை இழக்கிறார் என்பதை மறவாதீர்.
- வைகறை நிர்ணயித்துள்ள வகுப்பு மற்றும் தேர்வுக்கான வழிமுறைகளும், விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தங்களின் அரசுப்பணி இலக்கை அடைவதற்காக அக்கறையுடனும், பொறுப்புடனும், கண்டிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்க.
- கவனிக்க : முதலில் அக்டோபர் 2026 (Group II, IIA PRELIMS) வரை மட்டும் நாம் கட்டணம் (Rs.3000) நிர்ணயித்துள்ளோம். அதனை இணையவழியில் முழுமையாக செலுத்தி பயிற்சியில் இணையலாம். ( இதில் GENERAL SCHUDULE, WEEKLY WHERE TO STUDY, வார இறுதியில் 200 மதிப்பெண் OMR அடிப்படையிலான இணையவழி தேர்வு, விரிவான கலந்துரையாடல் குரல் பதிவு, ANSWER KEY PDF, MATHS SOLUTION COPY வழங்கப்படும்)
- அதன் பின்னர் பயிற்சியில் தொடர விரும்புபவர்கள் டிசம்பர் 2026 வரை இரண்டு மாதங்கள் GroupIV தேர்வுக்கான TEST-க்கு தனியாக கட்டணம் (Rs.1000) செலுத்தவேண்டும்.
- வைகறையின் விதி முறைகள் மற்றும் வழிகாட்டுதல் அனைத்தையும் முறையாக பின்பற்றி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 800க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களைப் போல் நிச்சயம். !!வைகறையில் விடியும் உங்கள் வாழ்க்கை!!