Tittle
Plan conditons
2026 - Group II, IIA & IV Common CLASS BATCH க்கான விதிமுறைகள்
*Subjects:
- பொதுத்தமிழ் (Tamil)
- பொது அறிவு (General Studies) – TAMIL MEDIUM
- திறனறிவு & கணிதம் (Aptitude) – TAMIL MEDIUM
Tests: All tests will be conducted in Tamil Medium ONLY
FOR ENGLISH MEDIUM மாணவர்களுக்கு தனியே தேர்வு அணி (TEST BATCH) மட்டும் (CLASS & TEST BATCH NOT AVILABLE FOR ENGLISH MEDIUM STUDENTS) உள்ளது.
தங்களது LOGIN - DASHBOARD பக்கத்தில் பாருங்கள். உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அந்த BATCH யில் சேர்ந்து கொள்ளுங்கள். ENGLISH MEDIUM மாணவர்களுக்கு வைகறை TEST BATCH மட்டுமே நடத்துகிறது. இந்த மேலும் எந்தெந்த புத்தங்களை படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும், WHERE TO STUDY மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு படித்து வைகறையின் தரமான தேர்வு அணியில் இணைந்து சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு நாளை அரசுப் பணிக் கனவை நனவாக்கலாம்.
ஒரு அணியில் சேர்ந்து விட்டு வேறு ஒரு அணிக்கு மாற்றிவிட சொல்லக் கூடாது. அவ்வாறு எங்களால் மாற்ற இயலாது. தேர்வு கட்டணமும் திருப்பி வழங்க இயலாது. எனவே கவனத்துடன் தெளிவான முடிவு எடுக்கவும்
இந்த இணையவழி பயிற்சி வகுப்பு (Online Class Batch) அணி 2026 ஜூலை தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும் என பயிற்சி காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNPSC 2026 அட்டவணையின் படி 2026 அக்டோபர் மாதம் Group II, IIA PRELIMS தேர்வும், பின்னர் டிசம்பர் GroupIV தேர்வும் நடைபெறவுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 6 மாதத்திற்கு இந்த வகுப்புகள் மற்றும் வாராந்திரத்தேர்வுகளை வைகறை நடத்த திட்டமிட்டு உள்ளது.
Group II, IIA & GroupIV பாடத்திட்டம் ஏறக்குறைய (சுமார் 85%) பொதுவான தலைப்புகளை கொண்டு இருக்கிறது. மேலும் Group II, IIA தேர்வுக்கு படிக்கும்போதே GroupIV தேர்வுக்கான பாடத்திட்டமும் முழுமை பெறுகிறது.
ஆகையால் முதலில் அக்டோபர் 2026 (Group II, IIA PRELIMS) வரை மட்டும் நாம் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். அதன் பின்னர் பயிற்சியில் தொடர விரும்புபவர்கள் டிசம்பர் 2026 வரை இரண்டு மாதங்கள் GroupIV தேர்வுக்கான TEST மற்றும் கூடுதல் வகுப்புகளுக்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
பயிற்சி வகுப்பு பற்றிய விவரங்கள்
o தினசரி அல்லது ஒரு சில வார நாட்களில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை அல்லது மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை (நேரம் மாறுதலுக்கு உட்பட்டது). இணையவழியில் Microsoft Teams App மூலம் LIVE ஆக மட்டும் வகுப்புகள் (RECORDED CLASSES NOT AVAILABLE)நடைபெறும்.
o இந்த பயிற்சி வகுப்பிற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் முக்கிய தகவல்களை மட்டும் கொண்ட அச்சடிக்கப்பட்ட பாடக்குறிப்புகள் (Books and Printed Materials) தங்களுடைய முகவரிக்கு தனியார் அஞ்சல் (private Courier) வழியாக 2 அல்லது 3 முறை அனுப்பி வைக்கப்படும்.
{பாடக்குறிப்புகள் 3 முறை அனுப்பப்படக் காரணம், முதல் முறை அனுப்பிய பிறகு நீங்கள் வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தால் அடுத்தடுத்த குறிப்புகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படாது}
o பயிற்சி மையத்தால் வழங்கப்படும் பாடக்குறிப்புகள் மற்றும் புத்தகங்களை தாங்கள் இணையவழி வகுப்பில் கலந்து கொள்ளும் போது கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பாடம் நடத்தவும் புரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும்.
o பயிற்சி மையத்தால் வழங்கப்படும் பாடக்குறிப்புகள் மற்றும் புத்தகங்கள், வகுப்பில் கொடுக்கப்படும் கூடுதல் தகவல்கள் தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுகி வெற்றி பெறுவதற்காக சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடக் குறிப்புகளை முறைகேடாக நகல் (Xerox) எடுத்தல், புகைப்படம் எடுத்து பகிர்தல், மாற்றி மறு பிரதியெடுத்தல் போன்றவற்றை செய்யும் நபர்கள் மீது காப்புரிமை சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
o தேர்வில் ஒரே வினா அல்லது வினாவில் வாய்ப்பை இழந்தவர் பல ஆயிரம் பேர் உள்ளனர். ஒரே மதிப்பெண் எடுத்த போதும் காலிப்பணியிடங்களின் அளவைப் பொறுத்து அரசு வேலை கிடைத்தவரும், அரசு வேலை கிடைக்காதவரும் இங்கு பலர் உள்ளனர். எனவே அத்தகைய வெற்றியைத் தீர்மானிக்கும் நோக்கில் பயிற்சி மையம் மாணவர்களுக்காக தனித்துவமாக தொகுத்து வழங்கியப் பாடக்குறிப்புகள் நன்றாக படிக்கும் வெளிநபர்களுக்கு முறைகேடாக வழங்கப்படும் பட்சத்தில் இங்கு படிக்கும் யாரோ ஒரு மாணவர் தனக்கான வாய்ப்பை இழக்கிறார் என்பதை மறவாதீர்.
o ஒவ்வொரு நாளும் இணையவழி பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழலில் விடுப்பு எடுக்கத் தேவை இருந்தால் வாட்செப் குழுவில் தாங்கள் வரஇயலாத காரணத்தை பதிவிட வேண்டும். பதிவிடவில்லையெனில் பயிற்சியில் நீடிக்க இயலாது. வகுப்பில் கலந்து கொள்பவர்கள் தவறாது தங்களின் Roll number மற்றும் Name பதிவிட்டே வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி மையம் சார்பிலும் வருகைப் பதிவு தினசரி கட்டாயம் எடுக்கப்படும்.
o இணையவழி வகுப்பில் Join செய்து விட்டு பயிற்றுநர் தங்களின் Roll number மற்றும் பெயர் சொல்லி ஏதாவது கேட்கும் போது பதில் சொல்லாமல் இருப்பவர்களின் Roll number குறிக்கப்பட்டு அடுத்து வரும் காலங்களில் வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். (பதிவுக்காக வகுப்பில் இணைந்து விட்டு வேறு பணிகளை பார்க்க சிலர் சென்று விடுவதால் இம்முடிவு)
o இணையவழி வகுப்புகளை வகுப்பு நடைபெறும் நாளில் மட்டுமே பார்த்து பயன்படுத்திக் கொள்ள இயலும், அட்டவணையில் (schedule) குறிப்பிட்ட நாளைத் தவிர வேறொரு நாளில் அல்லது அதே வகுப்பு மீண்டும் மறு ஒளிப்பரப்பு செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு நாளும் வகுப்பில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுவது தங்களின் பொறுப்பாகும்
o இதற்காக அனைவரும் Unlimited Data வை Recharge செய்து வைத்திருப்பதும் அல்லது தடையில்லா wifi வசதியைப் பெற்றிருப்பதும், வகுப்பில் கலந்து கொள்ளும் போது Network coverage உள்ள பகுதியில் இருப்பதும் மிக மிக அவசியமானது. எனவே இவற்றை எல்லாம் உறுதி செய்து விட்டு பயிற்சியில் இணைந்து முழுமையாக பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.
இணையவழித் தேர்வு பற்றிய விவரங்கள் :
o புதிதாக படிப்பவர்களும் எளிதாக பாடத்திட்டத்தை படித்து முடிக்கும் வகையில் அடிக்கடி REVISON உடன், வார இறுதியில் 200 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் அதிக கேள்விகள் கேட்கப்படும் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
- இத்தேர்வு பொதுத்தமிழ் - 100, கணிதம் - 25, பொது அறிவு - 75 (அறிவியல் 15 + சமூக அறிவியல் 50 + நடப்பு நிகழ்வுகள் 10) என்ற எண்ணிக்கையில் மொத்தம் 200 வினாக்களுக்கு நடைபெறும்.
o இத்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பான்மையாக புதிய மற்றும் பழைய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பொதுத்தமிழ், அறிவியல், சமூக அறிவியல், பாட சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில வெளிப்பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு TNPSC நடத்தும் அனைத்து (தமிழ், பொதுஅறிவு, கணிதம்) பாடத்திட்டத்திலுள்ள தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் நடைபெறும்.
- இதற்காக 6 -12th பொதுத் தமிழ் (NEW & OLD VERSION), அறிவியல், சமூக அறிவியல் ( 6 -10 th CURRENT BOOKS), +1, +2 CURRENT வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், புவியியல், இந்திய அறவியலும் பண்பாடும்,வணிகவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய சமச்சீர் புத்தகங்களை படிக்கத் துவங்கும் முன் மாணவர்கள் கட்டாயம் கையில் வைத்து இருக்க வேண்டும்.
o வைகறையில் வாராந்திரத் தேர்வுகளுக்கான உத்தேச முழுத் தேர்வு கால அட்டவணையையும், இது தவிர ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தேர்வுக்குரிய விரிவான where to study யையும் நீங்கள் பார்த்துக் கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனைச் சரியாக குறித்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.
o தேர்வினை திறன்பேசி (Smartphone), மடிக்கணினி (Laptop), கையடக்க கணினி (Tablet), PC (Personal Computer) வழியாக எழுதிக் கொள்ள முடியும்.
- TNPSC யில் பெரும்பான்மையான தேர்வுகள் OMR வழியில் நடத்தப்படுவதால் வைகறையும் இத்தேர்வுகளை OMR வழியாக நடத்துகிறது.
இதற்காக TNPSC ஆல் வழங்கப்பட்டுள்ள மாதிரி OMR தாளினை தேர்வர்கள் தேவையான அளவு தேர்வு எழுதத் தொடங்குவதற்கு முன் Printout எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான link அல்லது Pdf வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு முறையில் வினாத்தாளினை Pdf வடிவில் கணினியில் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே Print out எடுத்து வைத்துள்ள OMR-இல் கருப்பு நிற பேனா மூலம் மட்டுமே Shade செய்ய வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன் காண்பிக்கப்படும் விடைக்குறிப்புகள் (ம) விளக்கங்களைக் கொண்டு OMR விடைத்தாளினைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
இணையவழியில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 கேள்விக்கு (2 மணி 30 நிமிடங்கள்) அனைத்து விடைகளையும் கணக்கிட்டு OMR னை முழுமையாக இதற்குள் பூர்த்தி செய்வதற்கான நேரமும் இதில் அடங்கும்.
OMR ல் தவறாது கையெழுத்து மற்றும் கைரேகையும் இட வேண்டும்.
தேர்வினை எழுதி முடித்தவுடன் அந்தக் குறிப்பிட்ட வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் (Answer key) ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே உங்கள் இணையதளப் பக்கத்தில் பார்க்க இயலும்.
தேர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை Audio clip வடிவில் பதிவு செய்துள்ளோம். நீங்கள் அதனை Play செய்வதன் மூலம் தேவைப்படும் குறிப்புகள், விளக்கங்களை கேட்டுக் குறித்துக் கொள்ள முடியும்.
மேலும் வினா மற்றும் விடையை (Answer Key Pdf) மட்டும் Material வடிவில் (Download) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் OMR யை சரியாகத் திருத்தி நீங்கள் சரியாக விடையளித்துள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
நீங்கள் தேர்வு எழுதும் OMR எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே ஒவ்வொரு OMR யும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் தவறான மதிப்பெண்ணைப் பதிவிடுவது கண்டறியப்பட்டால் பயிற்சியை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.
- வினாத்தாள்களை SCREEN SHOT எடுப்பது , SCREEN RECORD செய்வது, PHOTO அல்லது VIDEO எடுப்பவர்களை நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக கண்காணித்து வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபடுபட்டால் நிச்சயம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தேர்வினை எழுதி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக தேர்வினை எழுதாமல் இருப்பவர்கள் (2 தேர்வுகளுக்கு மேல்) கண்டறியப்பட்டால் உறுதியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். வெற்றிக்கு சீரான பயிற்சி அவசியம்.
பயிற்சியில் இணைந்த பிறகு பிறகாரணங்களுக்காக பயிற்சியிலிருந்து விலக நேரிட்டால் தாங்கள் செலுத்தியக் கட்டணம் திருப்பி வழங்கவோ அல்லது வேறு நேரடி அல்லது இணையவழி பயிற்சிக்கு மாற்றித்தரவோ இயலாது என்பதை கவனத்தில் கொள்க. பின்னர் இது தொடர்பான எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறுகிய கால இடைவெளியில் பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால் பாடத்திட்டத்தின் கடினத் தன்மையை தவிர்க்க இயலாது. மேலும் நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் ஒதுக்கி படிப்பது அவசியமாகும்.
இந்த அணியில் இணைய வழி (ONLINE CLASS ) வகுப்புகள் அனைத்தும் தமிழ் வழியில் (TAMIL MEDIUM ) மட்டுமே நடைபெறும். மேலும் இவ்வகுப்புகளுக்கான பாடக் குறிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியில் தான் இருக்கும் என்பதை கட்டாயம் கவனத்தில் கொள்க.
வைகறையில் தேர்வு எழுத பல ENGLISH MEDIUM மாணவர்கள் விரும்புவதால் தற்போதைக்கு குரூப் II, IIA வுக்கு மட்டும் உள்ள GENERAL ENGLISH, அனைத்து தேர்வு களிலும் உள்ள GENERAL STUDIES + APTITUDE பகுதிகளை அட்டவணையாக கொண்ட TEST BATCH னை மட்டும் வைகறை நடத்துகிறது.
ஆங்கில வழியில் படிப்பதற்கான எந்த ஒரு METRIAL யையும் வைகறை வழங்காது. இருந்த போதும் ENGLISH MEDIUM படித்த மாணவர்கள் CLASS BATCH யில் யாரேனும் இணைய விரும்பினால் மேற்கண்ட விதிகளுக்கு உடன்பட்டால் மட்டும் சேர்ந்து கொள்ளவும். ஆனால் இடையில் மொழியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனக்கூறி பயிற்சியில் இருந்து பகுதியுடன் விலகினால் எக்காரணம் கொண்டும் பயிற்சி கட்டணம் திரும்ப பெறுதல் இயலாது.
வைகறை நிர்ணயித்துள்ள வகுப்பு மற்றும் தேர்வுக்கான வழிமுறைகளும், விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தங்களின் அரசுப்பணி இலக்கை அடைவதற்காக அக்கறையுடனும், பொறுப்புடனும், கண்டிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்க.
கவனிக்க : முதலில் அக்டோபர் 2026 (Group II, IIA PRELIMS) வரை மட்டும் நாம் கட்டணம் (Rs.5000) நிர்ணயித்துள்ளோம். அதனை இணையவழியில் செலுத்தி பயிற்சியில் இணையலாம்.இதில்,
தினசரி இணையவழி வகுப்புகள், வைகறை கணித புத்தகம் 3 பாகங்கள், பொதுத்தமிழ் உட்பட ALL SUBJECT முக்கிய வகுப்பு பாடக்குறிப்புகள் (HARD COPY - COURIER ), OUT SOURCE PDF (SOFT COPY), TENTATIVE TEST SCHEDULE, WEEKLY WHERE TO STUDY, வார இறுதியில் 200 மதிப்பெண் OMR அடிப்படையிலான இணையவழித் தேர்வு, விரிவான கலந்துரையாடல் குரல் பதிவு, ANSWER KEY PDF, MATHS SOLUTION COPY, வழங்கப்படும்.
அதன் பின்னர் விருப்பப்பட்டால் டிசம்பர் 2026 வரை இரண்டு மாதங்கள் GroupIV தேர்வுக்கான TEST மற்றும் கூடுதல் வகுப்புகளுக்கு தனியாக பயிற்சியில் தொடர விரும்புபவர்கள் கட்டணம்(Rs.2000) செலுத்தவேண்டும்.
- வைகறையின் விதி முறைகள் மற்றும் வழிகாட்டுதல் அனைத்தையும் முறையாக பின்பற்றி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 800க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களைப் போல்
நிச்சயம்
!வைகறையில் விடியும் உங்கள் வாழ்க்கை!!